This Article is From May 15, 2020

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 10,108 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்று மட்டும் 11,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று தொற்று ஏற்பட்டவர்களில் 253 பேர் ஆண்கள், 181 பேர் பெண்கள் ஆவர். 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் மட்டும் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் புதிதாக 434 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்த 434 பேரில் 385 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்களில் 40 பேர் மகாராஷ்டிராவில் இருந்தும், 2 பேர் குஜராத்தில் இருந்தும், ஒருவர் கர்நாடகாவில் இருந்தும் வந்தவர்கள். 

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 10,108 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்று மட்டும் 11,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று தொற்று ஏற்பட்டவர்களில் 253 பேர் ஆண்கள், 181 பேர் பெண்கள் ஆவர். 

ஒட்டுமொத்தமாக 6,642 ஆண்கள், 3,463 பெண்கள், 3 திருநங்கைகள் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் 38 அரசு மற்றும் 20 தனியார் என மொத்தம் 58 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இன்று மட்டும் 359 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 2,599 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். இன்று 5 பேர் உள்பட மொத்தம் 71 பேர் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் மட்டும் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

.