டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 38,889 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹைலைட்ஸ்
- இதுவரையில்லாத அளவுக்கு ஒரே நாள் உச்சத்தை தமிழகம், சென்னை பெற்றது
- தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது
- ஒரே நாளில் 60 பேர் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தனர்
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்தை இன்று தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அவர்களில் 2,378 பேர் ஆண்கள், 1,565 பேர் பெண்கள் ஆவர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 ஆயிரத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ள 90 ஆயிரத்து 167 பேரில், 55,502 பேர் ஆண்கள், 34,644 பேர் பெண்கள், 21 பேர் திருநங்கைகள் ஆவர்.
கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 16 பேர் தனியார் மற்றும் 44 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2 மணி நேரத்தில் 2,325 பேர் சிகிச்சை குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது.
டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 38,889 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதன் முறையாக சென்னையில் இன்று 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 246 பேருக்கும், திருவள்ளூரில் 153 பேருக்கும், வேலூரில் 69 பேருக்கும், தேனியில் 75 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 90 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.