தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது
- இன்று ஒரே நாளில் மட்டும் 48 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்
- தேசிய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 48 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் தமிழகம் முழுவதும் 2,174 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு சென்னையில் 35 ஆயிரத்து 556 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 842 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 27,674 ஆக உயர்ந்திருக்கிறது.
கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்த 48 பேருடன் சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.