முதல் சுற்று முடிவில் செந்தில் பாலாஜி, 5,102 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்
இன்று இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
காலை 11:30 மணி நிலவரப்படி, 22 சட்டமன்றத் தேர்தலில் 12-ல் திமுகவும், 9-ல் அதிமுக-வும் முன்னிலை வகித்து வந்தன. ஆனால் அரவக்குறிச்சித் தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை குறித்து எந்த வித தகவலும் சுமார் 12:30 மணி வரை தெரிவிக்கப்படவில்லை. இந்த தாமதத்துக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.
திருவாரூர், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோழிங்கர், குடியாத்தம், ஆம்பூர், தஞ்சை, பெரியகுளம், பரமக்குடி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
அரவக்குறிச்சித் தொகுதியில், திமுக சார்பில் கரூர் மாவட்ட பொறுப்பாரளர் செந்தில் பாலாஜி போடியிட்டார். அதிமுக சார்பில் செந்தில்நாதன் களமிறக்கப்பட்டார்.
முதல் சுற்று முடிவில் செந்தில் பாலாஜி, 5,102 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். செந்தில்நாதன், 3,911 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.