Read in English
This Article is From May 23, 2019

“தலை வணக்கம் தமிழகமே!”- வெற்றிக்குப் பின்னர் நெகிழ்ந்த மு.க.ஸ்டாலின்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதியில் திமுக 38 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது

Advertisement
இந்தியா Written by

22 சட்டமன்ற இடைத் தேர்தலில் 13 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது

2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகுளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழக தேர்தல் முடிவுகள், திமுக-வுக்குச் சாதகமாக வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். 

ஸ்டாலின் வெற்றி குறித்து கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்” என்றுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதியில் திமுக 38 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் 13 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. மீதமுள்ள 9 இடங்களில் அதிமுக முன்னிலையில் இருக்கிறது.

Advertisement

இந்திய அளவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் முன்னிலையில் இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமாக 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement