This Article is From May 05, 2020

மே 17-ம்தேதி வரையில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கான அனுமதி ரத்து!!

முன்பு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணி புரியலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மே 17-ம்தேதி வரையில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கான அனுமதி ரத்து!!

பொதுநலன் கருதி அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • அனுமதி பெற்று பணிக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது
  • மே17 வரை வீட்டுப் பணியாளர்கள் வேலைக்கு செல்ல தடை விதிப்பு
  • பொது நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவிப்பு

மே 17-ம்தேதி வரையில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கான அனுமதியை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

முன்பு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணி புரியலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது-

மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தவை மே 4 முதல் மே 17ம்தேதி நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளின் அடிப்படையில் நீட்டிப்பு செய்ததன் அடிப்படையில் 03.05.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. 

அந்த அரசாணையில் வீட்டு பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணி புரிய அனுமதிக்கப்பட்டது.

தற்போது பொதுநலன் கருதி 04.05.2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் வீட்டு வேலை பணியாளர்களுக்கு பணி புரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது.

ஆகவே வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் 17.05.2020 நள்ளிரவு ஊரடங்கு முடியும் வரை தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்கு செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.