This Article is From Jul 04, 2020

சென்னையில் திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு தளர்வுகள் என்ன?

வணிக வளாகங்கள், மால்களைத் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள், நகை, ஜவுளி கடைகள் போன்றவை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் திங்கள் முதல்  நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு தளர்வுகள் என்ன?

தமிழகத்தில் இன்று சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகம் உள்ள சென்னையில் முழுமையான ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதன்பின்னர் திங்கள் முதல் சில கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்படுகின்றன. மறு உத்தரவு வரும் வரையில் இந்த தளர்வுகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உணவகங்கள் காலை 6 முதல் இரவு 9 வரை செயல்படும். பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. ஆன்லைன் டெலிவரிக்கும் இரவு 9 மணி வரை அனுமதி.  

- டீக்கடைகள் காலை 6  மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

- காய்கறி, மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

- வணிக வளாகங்கள், மால்களைத் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள், நகை, ஜவுளி கடைகள் போன்றவை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,842 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முதன்முறையாக சென்னையில் பாதிப்பு குறைந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையை விட இன்று மற்ற மாவட்டங்களில் 2 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 
 

.