This Article is From May 17, 2019

‘’குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ : முதல்வர் பழனிசாமி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் சர்ச்சைக் கருத்து குறித்து பதில் அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார்.

‘’குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ : முதல்வர் பழனிசாமி

மழை ஏதும் இல்லாத நிலையில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது-

குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு தேர்தலுக்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உத்தரவிட்டுள்ளோம். வறட்சி அதிகமாக உள்ள பகுதியில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களை அணுகி நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை தமிழக அரசு முன்கூட்டியே ஒதுக்கீடுசெய்துள்ளது.

கமலின் கருத்து குறித்து யாரும் பேசக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதால் அதுபற்றி ஏதும் பேச முடியாது. அண்ணா பல்கலைக் கழகத்தில் அரசின் தலையீடு இருப்பதாக துணை வேந்தர் சூரப்பா கூறுவது தவறான குற்றச்சாட்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

.