This Article is From Apr 07, 2020

சிமென்ட், உரம், மருந்து உள்பட 13 தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!!

தமிழக அரசு குறிப்பிட்டுள்ள 13 ஆலைகளில் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்கோ அல்லது ஏற்றுமதி செய்வதற்கோ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

சிமென்ட், உரம், மருந்து உள்பட 13 தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!!

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • சிமென்ட், உரம், மருந்து உள்பட 13 தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி
  • ஆலைகளில் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம்
  • மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது

சிமென்ட், உரம், மருந்து, சர்க்கரை உள்பட 13 தொழிற்சாலைகளை இயங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இதுதொடர்பாக தமிழக அரசின் அனைத்து செயலர்கள், காவல்துறை தலைவர், அனைத்து துறைகளின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது-
தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் வழிகாட்டுதலின்படி சில தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதல் விவரங்களுக்காக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன. 
அவையாவன :
1. உருக்கு
2. எண்ணெய் சுத்திகரிப்பு
3. சிமென்ட்
4. ரசாயனம்
5. உரங்கள்
6. ஜவுளி (ஆடைகளை தவிர்த்து)
7. சர்க்கரை ஆலைகள்
8. கண்ணாடி
9. உலோக உருக்கு ஆலைகள்
10. பதனிடும் நிலையங்கள்.
11. பேப்பர்
12. டயர்
13. கழிவுகள் அகற்றும் தொழிற்சாலைகள்.

ஆகியவை செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது. இங்கு குறைந்த பணியாளர்களைக் கொண்டு ஆலைகளை இயக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்பட்டு பேக்கேஜ் அல்லது முத்திரையிடப்பட்ட பொருட்களை ஏற்றுமதிக்காக மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லாம்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 24-ம்தேதி முதற்கொண்டு 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 13 தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு அனுமதி அளித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

.