This Article is From May 26, 2020

விவசாயத்திற்காக கன்னியாகுமரியில் தண்ணீர் திறப்பு! அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன பகுதிகளில் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

Advertisement
தமிழ்நாடு Posted by

நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயத்திற்காக கன்னியாகுமரி அணைகளில் தண்ணீரை திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

“கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனம் அமைப்புகளில் உள்ள பாசனத்திற்காக பேச்சிப்பாறை பெருஞ்சாணி சித்தார்-1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8-ம் தேதி முதல் 2021- பிப்ரவரி 28-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 850 கன அடி/ வினாடிக்கு பேச்சிப்பாறை பெருஞ்சாணி சித்தார்- 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன பகுதிகளில் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.

Advertisement

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement