This Article is From Jan 09, 2019

நாட்டிலேயே திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முதலிடம் - முதல்வர் பேச்சு

நாட்டிலேயே திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

நாட்டிலேயே திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முதலிடம் - முதல்வர் பேச்சு

நாட்டிலேயே திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசியதாவது-

பசுமை எரிசக்தி முயற்சியில் 11,750 மெகாவாட் எரிசக்தி மின் நிறுவு திறனுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் மாநில நிதியின் மூலம் அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

மொத்தம் 6,200 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அணைகளில் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அணைகளின் கொள்ளளவினை மீளப்பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாட்டில் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2018-2019-ம் நிதியாண்டில், நெடுஞ்சாலைத்துறை மூலம் 12,306 கி.மீ. சாலைப் பணிகளும், 238 ஆற்றுப் பாலங்களும், 16 சாலை மேம்பாலங்களும், 68 ரெயில்வே மேம்பாலங்களும், 2 நடை மேம்பாலங்களும் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

.