This Article is From Jun 20, 2019

ஜூன் 28ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

ஜூன் 28ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடர் துவங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.

ஜூன் 28ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

கூட்டத்தொடரின் முதல் நாளில் மறைந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. அன்று மாலை சட்டசபை அலுவல் கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டம் நடக்கும் என விவாதிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து, இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கூட்டத்தொடர் நடைபெற்றபோது மக்களவை தேர்தல் பணிகள் காரணமாக மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். இதேபோல், 9 அதிமுக எம்எல்ஏக்களும் பதவியேற்றனமர். சட்டப்பேரவையில் திமுகவுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில் தற்போது 101-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வரும் 28-ந் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். மேலும், சபாநாயகருக்கு எதிராக திமுக அளித்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் உள்ள நிலையில் பேரவை கூடுகிறது.

முன்னதாக, திமுக தலைவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சட்டமன்றம் கூடும்போது நாங்கள் எப்படி செயல்பட போகிறோம் என்பதை நீங்கள் நேரடியாக பார்க்க உள்ளீர்கள். அப்போது, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

வெயிட் அன்ட் ஸி, சட்டமன்ற தேதி அறிவித்ததும் அதுகுறித்து நாங்கள் முடிவெடுப்போம் என்று அவர் கூறியிருந்தார்.

.