தமிழகத்தின் சில உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது
தென் மேற்குப் பருவமழை ஆரம்பிக்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. சில உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பது குறிதுத சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், “தமிழகம், கேரளா, லட்சதீபம் மற்றும் தென் கர்நாடகாவில் நாளை சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்ஷியஸும் இருக்கும்.
கேரளாவில் இன்று ஆங்காங்கே கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஹீட்-வேவ் வீச உள்ளது.
பொதுவாக மதிய வேளையில் 1 மணி முதல் 4 மணி வரை, மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.