This Article is From Feb 13, 2019

பேட்ஸ்மேனாக மாறிய அமைச்சர் ஜெயக்குமார் - மட்டையை சுழற்றி பந்தை பறக்க விட்டார்

சென்னையில் இன்று நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறிது நேரம் பேட்ஸ்மேனாக மாறினார். அவரை மாணவ மாணவிகள் விசில் அடித்து உற்சாகப்படுத்தினர்.

பேட்ஸ்மேனாக மாறிய அமைச்சர் ஜெயக்குமார் - மட்டையை சுழற்றி பந்தை பறக்க விட்டார்

மேடைகளில் அவ்வப்போது பாட்டுப்பாடி அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டுக்களை குவித்து வருகிறார்

ஹைலைட்ஸ்

  • மேடைகளில் பாட்டுப்பாடி பலரது பாராட்டுக்களை பெற்றவர் ஜெயக்குமார்
  • பேட்டிங் செய்த வீடியோ வைரலாகி வருகிறது
  • ஜெயக்குமாரின் பேட்டிங் வீடியோவுக்கு மீம்ஸ் குவிகின்றன

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் சற்று நேரத்திற்கு பேட்ஸ்மேனாக மாறிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது. சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இடைவிடாமல் 15 மணி நேரத்திற்கு பந்து வீசும் சாதனையை தொடங்கினார். அவரை நேரில் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு வாழ்த்துக்களை கூறினார். 

அப்போது, அங்கிருந்தவர்கள் அமைச்சரை கிரிக்கெட் விளையாடுமாறு கூறினர். இதையடுத்து கிரிக்கெட் பேட்டை எடுத்த ஜெயக்குமார், அதனை சுழற்றியவாறே களத்தில் இறங்கினார். 

அவர் பேட் செய்தபோது சுற்றி இருந்தவர்கள், தோனி தோனி என்று குரல் எழுப்பி உற்சாகப்படுத்தினர். ஒரு சில பந்துகள் மிஸ் ஆனபோதும், சில பந்துகள் அவரது பேட்டில் பட்டு பறக்கத் தொடங்கின. இந்தக் காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவில் பதிவு செய்து இணைய தளத்தில் விட்டுள்ளனர். அந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. 

அமைச்சர் ஜெயக்குமார் சமீப காலமாக பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். பாடல்களை பாடுவதில் ஆர்வம் கொண்ட அவர், சில மேடைகளில் பாடல்களை பாடி பாராட்டுக்களை பெற்றுள்ளார். தற்போது அவர் கிரிக்கெட் மட்டையை எடுக்கத் தொடங்கியுள்ளார். 
 

.