This Article is From Jun 06, 2019

நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட முன்னேற்றம் கண்ட தமிழகம்! 9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி!!

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 48.57-ஆக உள்ளது.

நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட முன்னேற்றம் கண்ட தமிழகம்! 9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி!!

மொத்தம் 7 லட்சம்பேர் தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

New Delhi:

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. தேசிய அளவில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 

இதில் தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தளவில் இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 39.56-சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டில் அதிகரித்திருக்கிறது. 

கே. ஸ்ருதி, தமிழக அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்திருக்கிறார். அவர் 720-க்கு 685 மதிப்பெண்களை  பெற்றுள்ளார். தேசிய அளவில் ஸ்ருதிக்கு 57-வது இடம் கிடைத்திருக்கிறது. 

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் கடந்த ஆண்டை விட தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. 

தேசிய அளவில் ராஜஸ்தான் மாணவர் நளின் கந்தல்வால் முதலிடம் பிடித்துள்ளார். வெற்றி குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'நான் கடந்த 2 ஆண்டுகளாக எனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது பெற்றோர் மருத்துவர்கள். எனது மூத்த சகோதரர் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். 

அவர்கள் எனக்கு முழு ஆதரவாக இருந்தார்கள். எனது வெற்றிக்கு ஆசிரியர்களும் முக்கிய காரணம். தினமும் நான் 7 முதல் 8 மணி நேரம் படிப்பேன்.'  என்று கூறினார். 
 

.