This Article is From May 18, 2019

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நாளை இடைத் தேர்தல்!

18 தொகுதிகளுக்கான சட்டமனற் இடைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம்தேதி நடைபெற்றது.

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நாளை இடைத் தேர்தல்!

தமிழக சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை பெறுவதற்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி, சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

முன்னதாக தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம்தேதி நடைபெற்றது. 

சூலூர் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அரவக்குறிச்சியில் அதிமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி திமுகவுக்கு கட்சி மாறினார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. 

ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. சுந்தர ராஜ் தகுதி நிக்கம் செய்யப்பட்டார். இதேபோன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் கடந்த ஆண்டு மறைந்தார். இதன் காரணமாக இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. 

இந்த 4 தொகுதிகளில் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அரவக்குறிச்சியில் மட்டும் 63 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சுமார் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் மெஜாரிட்டியை பெறுவதற்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 

தற்போ ஆளும் அதிமுக அரசுக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால் இந்த 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

.