என்.ஐ.ஏ. கைது செய்திருக்கும் 127 பேரில் 33 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
இந்து அமைப்பின் தலைவர்களை கொள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சதி செய்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, தேசிய புலனாய்வு ஏஜென்சியான NIA அதிகாரிகள் கோவை மற்றும் நாகை மாவட்டம் நாகூரில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது மகன் ஓம்கார் ஆகியோரைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ.வை உள்ளூர் போலீசார் கடந்த ஜூலை மாதமே என்.ஐ.ஏ.வுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின்போது இதேபோன்ற ரெய்டை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழ்நாட்டில் நடத்தினர். இதில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதன் மூலம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பந்தம், இந்து முன்னணி தலைவர் மூகாம்பிகை மணி மற்றும் சக்தி சேனா தலைவர் அன்பு மாரி ஆகியோரை கொல்ல திட்டமிடப்பட்ட சதி முறியடிக்கப்பட்டது.
உளவுத்துறை மற்றும் போலீசார் அளிக்கும் தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி தென்னிந்தியாவில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து என்.ஐ.ஏ. கைது செய்திருப்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அவர். கடந்த 2014-ல் இருந்து மொத்தம் 127 ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)