This Article is From Nov 15, 2018

கஜா புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் இன்று பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து!

கஜா புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் இன்று பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் இன்று பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து!

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு 510 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மேற்கு, தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கி.மீட்டரில் இருந்து 13 கி.மீட்டராக அதிகரித்துள்ளது.

கஜா புயல் இன்று நவ.15 ஆம் தேதி முதல் பாம்பனுக்கும் - கடலூருக்கும் இடையே கரையை கடக்கக் கூடும். இதன் காரணமாக இன்று கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும்.

மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும். சமயங்களில் 100 கிமீ வரை வீசக்கூடும். இந்த மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை மிக கனமழை பெய்யக்கூடும். கஜா புயல் தற்போது புயல் சின்னமாகவே இருக்கிறது. இது

தீவிரமடைந்தாலும் பிறகு வலுவிழந்து புயலாகவே கரையைக் கடக்கும். இதனால், மீனவர்கள் 15ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை மற்றும் காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
 

.