சென்னையை பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை பொருத்தளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்.
குறிப்பாக 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் அதி கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்ங்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1-ம்தேதி தொடங்கியது. அந்த மாதம், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் வழக்கத்தை விட மழை குறைவாக பெய்தது குறிப்பிடத்தக்கது.