This Article is From Oct 29, 2019

‘நிலவில் நீர்; செவ்வாயில் வீடு எதற்காக?’ சுர்ஜித் விவகாரத்தில் காட்டமான ஹர்பஜன்!!!

சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் பிரார்த்தனை நடைபெற்று வந்த நிலையில், மீட்பு பணி தோல்வியில் முடிந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
இந்தியா Written by

வெள்ளிக்கிழமை முதற்கொண்டு சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு என்று சுர்ஜித் விவகாரத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்துள்ளான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தோல்வீயில் முடிந்தது. 

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு என்று சுர்ஜித் விவகாரத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.#சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு  பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக பதிவிட்ட ட்விட்டில், நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 #Diwali என்று கூறியிருக்கிறார் ஹர்பஜன்.

Advertisement
Advertisement