This Article is From Nov 15, 2018

‘நியூஸ் ஜெ’ செய்தி சேனலை தொடங்கியது அ.இ.அ.தி.மு.க.

தமிழகத்தை ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொலைக்காட்சியாக ‘நியூஸ் ஜெ’ செய்தி சேனல் செயல்படும்.

‘நியூஸ் ஜெ’ செய்தி சேனலை தொடங்கியது அ.இ.அ.தி.மு.க.

செய்தி சேனல் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Chennai:

தமிழகத்தில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நியூஸ் ஜெ என்ற செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அஇஅதிமுக இந்த முயற்சியை செய்திருக்கிறது.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆளும் அஇஅதிமுக சார்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

முன்பு, கட்சியின் சேனலாக இருந்த ஜெயா டிவி தற்போது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா குடும்பத்தின் வசம் உள்ளதால், தனக்கென புதிய செய்தி சேனலை அஇஅதிமுக தொடங்கியுள்ளது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா கொண்டுவந்து நடைமுறைப்படுத்திய திட்டங்கள் குறித்து, தமிழக மீடியாக்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை நான் கோரிக்கையாக வைத்துக் கொள்கிறேன். எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு, அதனை திரும்ப திரும்ப சில செய்தி சேனல்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் இந்த கருத்தை நான் வலியுறுத்தி கூறுகிறேன் என்றார்.

இடைத்தேர்தல் மற்றும் 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அஇஅதிமுக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஆர். ராஜலக்ஷ்மி கூறுகையில், “இடைத்தேர்தல் மற்றும் அடுத்து வரும் மக்களவை தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெறும். நாங்கள் மட்டும்தான் தேர்தலுக்கு முழு அளவில் தயாராகி இருக்கிறோம்” என்றார்.

.