Read in English
This Article is From Oct 29, 2019

சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெறும் இடத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! #Surijth

மீட்பு பணிகள் கடந்த 72 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. முதலில் நேற்று காலை பணியை தொடங்கிய முதலாவது ரிக் எந்திரம் 35 அடி ஆழத்திற்கு சுரங்கம் அமைத்தது. இதன்பின்னர், முதலாவது ரிக் எந்திரத்தை விட 3 மடங்கு சக்தி கொண்ட 2-வது ரிக் எந்திரம், 10 ஆழத்திற்கு சுரங்கம் அமைத்தது. 

Advertisement
தமிழ்நாடு Edited by ,

சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.

ரிக் எந்திரம் பழுதடைந்துள்ள நிலையில் போர் வெல் மூலம் குழிகள் அமைத்து, பின்னர் ரிக் மூலமாக அதனை அகலப்படுத்தலாம் என்ற திட்டம் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 

மீட்பு பணிகள் கடந்த 72 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. முதலில் நேற்று காலை பணியை தொடங்கிய முதலாவது ரிக் எந்திரம் 35 அடி ஆழத்திற்கு சுரங்கம் அமைத்தது. இதன்பின்னர், முதலாவது ரிக் எந்திரத்தை விட 3 மடங்கு சக்தி கொண்ட 2-வது ரிக் எந்திரம், 10 ஆழத்திற்கு சுரங்கம் அமைத்தது. 

சுரங்கம் தோண்டும் இடத்தில் பாறைகள் மிகவும் கடினமாக உள்ளதால் சுரங்கம் ஏற்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, அதிக திறன் கொண்ட போர்வெல் மூலம் 3 குழிகளை முதலில் அமைத்து அதன்பின்னர், ரிக் எந்திரம் மூலமாக அதனை அகலப்படுத்தும் திட்டத்தில் மீட்பு படையினர் உள்ளனர்.

இந்த திட்டத்தின் அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக சுரங்கம் அமைப்பதற்கு மொத்தம் 12 மணி நேரம் ஆகும் என்று வருவாய்த்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 65 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டுமென ட்விட்டரில் தமிழக மக்கள் பலர்  #SaveSujith #PrayforSujith என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement