This Article is From Dec 23, 2019

அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் ஜனவரி 3-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாக்குகள் 2020 ஜனவரி 2-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில்  ஜனவரி 3-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும்!!

உள்ளாட்சி தேர்தலை முடிவையொட்டி பள்ளி திறப்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் ஜனவரி 3-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் ஜனவரி 2-ம்தேதி வெளியாகிறது. இதன்பின்னர் 3-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 

தமிழகத்தில் 10,11,12 உள்ளிட்ட வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் கடந்த 11-ம்தேதி தொடங்கி 23-ம்தேதி வரையில் நடைபெற்றன. இதையடுத்து, அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே மீண்டும் பள்ளி எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் காணப்பட்டது. 

ஜனவரி 1-ம்தேதி புத்தாண்டு விடுமுறை என்பதால் ஜனவரி 2-ம்தேதி பள்ளி திறக்கப்படலாம் என்று தகவல்கள் பரவியது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை இன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2-ம்தேதி வெளியாகுவதால், ஜனவரி 3-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாக்குகள் 2020 ஜனவரி 2-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 

.