This Article is From May 27, 2019

''ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்; முடிவில் மாற்றமில்லை'' : பள்ளி கல்வித்துறை

கோடை வெயில் நீடிப்பதால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதனை பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Advertisement
இந்தியா Written by

மக்களவை தேர்தல் காரணமாக பள்ளித் தேர்வுகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டன.

ஜூன் 3-ம்தேதி அதவாது அடுத்தவாரம் திங்கள் கிழமை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், இந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மக்களவை தேர்தல்  தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம்தேதி நடைபெற்றது. இதையொட்டி, அனைத்து பள்ளி தேர்வுகளும் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே கடந்த ஏப்ரல் 14-ம்தேதியே நிறைவு பெற்றது. இதையடுத்து, மாணவர்களுக்கு சுமார் 50 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. 

தற்போது கோடை வெயில் நீடித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது. 

இந்த நிலையில் ஜூன் -3-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், இந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 

Advertisement
Advertisement