Read in English
This Article is From Apr 01, 2019

அரியலூரில் துப்பாக்கியால் சுட்டு பதற்றத்தை ஏற்படுத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்!!

தேர்தல் பணிக்காக அரியானாவை சேர்ந்த அதிகாரி ஹேமந்த் கல்சான் அரியலூரில் நியமிக்கப்பட்டிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

ஐ.பி.எஸ். அதிகாரி கல்சானின் செயல் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Chandigarh:

அரியலூரில் தேர்தல் பணிக்காக வந்த ஐ.பி.எஸ். அதிகாரி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதற்றத்தை ஏற்படுத்தினார். அரியானாவை சேர்ந்த அவரை அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

அரியானாவை சேர்ந்த ஹேமந்த் கல்சான் என்ற அதிகாரி தமிழகத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் 2001-ம் ஆண்டை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியாவார். தற்போது அவர் ஐ.ஜி. நிலையில் இருக்கிறார். 

அரியலூரில் தேர்தல் பணிகளை கண்காணித்த கல்சான் நேற்று கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கியை பறித்து வானை நோக்கி சுட்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அவர் ஏன் எதற்காக சுட்டார் என்று எவருக்கும் தெரியவில்லை. 

இந்த சம்பவத்திற்கு பின்னர் கான்ஸ்டபிளிடம் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு எதுவுமே நடக்காதது போன்று மறுபடி தூங்கச் சென்று விட்டார். ஓர் உயர் அதிகாரியின் இந்த நடவடிக்கை அங்கிருந்த மற்ற காவலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Advertisement

இந்த நிலையில் கல்சானை சஸ்பெண்ட் செய்து அரியானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே அரியானா அதிகாரி கல்சானை தேர்தல் பொறுப்புகளில் இருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விடுவித்துள்ளார். அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement