This Article is From Apr 17, 2019

கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை! மக்கள் மகிழ்ச்சி!!

கோடையையொட்டி தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

ஊட்டியிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்திருக்கிறது.

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் தமிழகத்தின் சில  மாவட்டங்களில் மழை பெய்திருப்பது வெப்பத்தை தணித்துள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே நெல்லையில் கடும வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது அங்கு பெய்திருக்கும் மழை வெப்பத்தை தணித்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், தோவாளை, தக்களை, திருவெட்டாறு, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகர்கோவிலின் சில இடங்களிலும் மழை பெய்தது. இதனால் சாலையின் இரு புறத்திலும் மழை பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோன்று ஊட்டியிலும் மதியம் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. கோடை காலத்தில் வெயில் சுட்டெரித்ததால் உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் அங்கு மழை பெய்திருப்பது சற்று நிம்மதியை அளித்திருக்கிறது.

Advertisement
Advertisement