This Article is From Dec 16, 2019

Citizenship Act-க்கு எதிரான போராட்டம்; டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல்; களத்தில் தமிழக மாணவர்கள்!

Citizenship Act Protest - "சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே கோஷம் எழுப்பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்"

Citizenship Act-க்கு எதிரான போராட்டம்; டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல்; களத்தில் தமிழக மாணவர்கள்!

Citizenship Act Protest - மதுரை மற்றும் கோவையில் ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச்’ சேர்ந்த மற்றும் பிற நூற்றுக்கணக்கான மாணவர்கள், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர்.

Citizenship Act Protest - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில், நேற்று டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களுக்கும் போலீஸுக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக, மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் டெல்லியில் நேற்றிரவு முதல் மிகவும் பதற்றமான சூழல் காணப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு நீதி கேட்டும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

ese6kjg

சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே கோஷம் எழுப்பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மதுரை மற்றும் கோவையில் ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச்' சேர்ந்த மற்றும் பிற நூற்றுக்கணக்கான மாணவர்கள், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர். மதுரை சந்திப்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீஸ் கைது செய்தது. 

கோவையில் ரயிலை மறிக்க பேரணியாக சென்ற மாணவர்கள் மீது தடுத்து நிறுத்தியுள்ளது போலீஸ். அப்போது காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் போலீஸ், மாணவர்களைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


 

.