"கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது"
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் நிலவி வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்குக் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும்,
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.