This Article is From May 15, 2019

ஆசிரியர் தகுதித் (TET) தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு!! விவரங்கள் உள்ளே!

கடந்த முறை நடைபெற்ற தேர்வில் தோல்வியடைந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியத்தை அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த நிலையில் டெட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தகுதித் (TET) தேர்வு  நடைபெறும் தேதி அறிவிப்பு!! விவரங்கள் உள்ளே!

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது

முதல் தாள் 08.06.2019 சனிக்கிழமை அன்று முதல் தாளும், 09.06.2019 ஞாயிறு அன்று 2-ம்தாளும் நடைபெறுகிறது. இந்த 2 தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. 

ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

டெட் தேர்வில் முதல் தாள் என்பது, ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 2-ம் தாள் என்பது 6 முதல் 8-ம் வகுப்பு வரைக்குமானதாக இருக்கும். 

கடந்த முறை நடைபெற்ற தேர்வில் தோல்வியடைந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியத்தை அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த நிலையில் டெட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

.