தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. உதகை, நெல்லை, கோவை, நாமக்கல், கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று சில இடங்களில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நாளை மறுநாள் முதல் ஏப்., 24ம் தேதி வரையிலும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.