This Article is From Apr 23, 2019

29-ம் தேதி உருவாகிறது புயல்… தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

"அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, நெல்லை, குமரி, திருவாரூர், தஞ்சை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்"

29-ம் தேதி உருவாகிறது புயல்… தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

'சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்’

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்.

புவியரசன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘வரும் 25 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றுழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும். 27 ஆம் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அடுத்த 2 நாட்களில் அந்த தாழ்வு மண்டலம் தமிழக கடோரப் பகுதியை நோக்கி நகர்ந்து, 29 ஆம் தேதி புயலாக உருவாகக்கூடும். இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தேனியில் 6 சென்டி மீட்டர் மழையும் திருவண்ணாமலை 5 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, நெல்லை, குமரி, திருவாரூர், தஞ்சை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்' என்று தகவல் தெரிவித்தார். 

.