அடுத்த 48 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக, பல இடங்களில் மழை பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம், “தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு குறிப்பாக வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தின் சிதம்பரத்திலும், கடலூரின் பரங்கிப்பட்டியிலும், நாகை மாவட்டத்தின் கொல்லிடத்திலும் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டதுடன் இருக்கும். நகரின் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும்” என்று தகவல் தெரிவித்துள்ளது.