This Article is From Dec 21, 2018

இன்னும் மழை பாக்கியுள்ளதா..?- தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் அடுத்து 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்

இன்னும் மழை பாக்கியுள்ளதா..?- தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் இனியும் மழை பெய்யுமா என்பது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று வெதர்மேன் தனது முகநூலில், ‘கிழக்கிலிருந்து தமிழகம் நோக்கி வீசும் காற்றினால், நாகை, காரைக்கால், நெல்லை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்து 2 முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரத்தின் ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பாம்பன் பகுதியில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

அதேபோல சிவகங்கை, தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்யப்பிருக்கிறது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் அடுத்து 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். அது சொல்லிக் கொள்ளும்படி இருக்காது.

இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை சென்னைக்கும் சரி, தமிழகத்துக்கும் சரி மிகவும் குறைவான அளவே மழை பொழிவைத் தந்துள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.

.