This Article is From Dec 20, 2019

“இந்த 3 மாவட்டங்கள்ல விடிய விடிய கொட்டப் போகுது மழை!”- Tamilnadu Weatherman அப்டேட்

Heavy rain in TN - "வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது"

“இந்த 3 மாவட்டங்கள்ல விடிய விடிய கொட்டப் போகுது மழை!”- Tamilnadu Weatherman அப்டேட்

Heavy rain in TN - "சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது."

Heavy rain in TN - தமிழகத்தில் பல இடங்களில் வடகிழக்குப் பருவமழை ஓய்ந்திருக்கும் நிலையில் தென் தமிழகத்தில் சில இடங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது. இது குறித்து பிரபல வானிலை வல்லுநர், தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman), பிரதீப் ஜான், அப்டேட் கொடுத்துள்ளார். 

“திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் இன்று இரவும், நாளை காலை வரை மழையின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகும். நாளை மதியத்திலிருந்து மழையின் தாக்கம் குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு இந்த இடங்களில் கவனமாக பார்ப்போம்,” என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் வெதர்மேன். 

முன்னதாக அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்ட இந்திய வானிலை ஆய்வு மையம், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும்

kqbnuli

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்

வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சூறைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

.