This Article is From Nov 19, 2019

தமிழக அளவில் கொட்டுது… சென்னைக்கு வஞ்சம்… மழை இருக்கா, இல்லையா?- Tamilnadu Weatherman Update!

Tamilnadu Weatherman Update - "மீண்டும் வரும் 20 முதல் 23 ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபும் மற்றும் திருவள்ளூரில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது"

Advertisement
தமிழ்நாடு Written by

Tamilnadu Weatherman Update - 'திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருகிறது.'

Tamilnadu Weatherman Update - தமிழக அளவில் பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை (Rain) பெய்து வருகிறது. சென்னையைப் (Chennai) பொறுத்தவரை அக்டோபர் மாதம் நல்ல மழை பெய்தது. அதைத் தொடர்ந்து சரியான வகையில் மழை இல்லை. இந்நிலையில் சென்னையில் அடுத்து எப்போது கனமழையை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman), பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

தனது முகநூல் பக்கத்தில் வெதர்மேன், “சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் கடந்த 14 முதல் 16 ஆம் தேதி வரை நல்ல மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், அது நெல்லூருக்குச் சென்றுவிட்டது. ஆனால், மீண்டும் வரும் 20 முதல் 23 ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபும் மற்றும் திருவள்ளூரில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதே நேரத்தில் மற்ற கடலோர மாவட்டங்களான கடலூர், புதுச்சேரி, நாகை, திருவாரூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்யும். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய நல்ல மழை பெய்யும். 

உள் மாவட்டங்களைப் பொறுத்தவரை விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூரில் வரும் 20 - 21 தேதிகளில் மழை வெளுத்து வாங்கும். மொத்தமாக, நம்பிக்கை வைத்துக் காத்திருக்கலாம்…,” என்று குறிப்பிட்டுள்ளார். 
 

Advertisement
Advertisement