இன்று தமிழகம் மற்றும் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது
- இதற்கான காரணம் குறித்து விளக்கியுள்ளார் வெதர்மேன்
- அனல் காற்று குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்
இன்று தமிழகம் மற்றும் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெதர்மேன் பதிவில், ‘உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்க உள்ளது. கடற்கரையிலிருந்து வரும் காற்றும் தரைக் காற்றும் அதிகமாக இருக்கும் என்பதால் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது. இதை, அடுத்த 5 நாட்களில் எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டில் முதன்முறையாக தமிழகத்தில் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஷியஸைத் தாண்டும்.
மேலும், பலர் அனல் காற்று எனப்படும் ஹீட்-வேவ் குறித்து பேசி வருகின்றனர். ஹீட்-வேவ் என்பதை முதலில் என்னவென்று புரிந்து கொள்வோம். ஒரு இடத்தின் அதிகபட்ச வெப்பநிலையானது 40 டிகிரி செல்ஷியஸைத் தாண்டும்போதுதான், அங்கு அனல் காற்று எனப்படும் ஹீட்-வேவ் இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படும். அதனால், இப்போதைக்கு யாரும் அனல் காற்று குறித்து அச்சப்பட வேண்டாம்.
அனல் காற்றை, புவி வெப்பமாதலுடன் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.