தமிழகத்தில் தண்ணீ ர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்கள் மழை எதிர்பார்த்துள்ளனர்.
வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில அடுத்த 2 நாட்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழையின்மை காரணமாகவும், கோடை வெயில் கொளுத்தி வருவதனாலும் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
இன்று மதியம் சென்னையின் மீனம்பாக்கம், ஆதம்பாக்கம், திருவான்மியூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது.
இந்த நிலையில் வங்கக் கடலில் இன்னும் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் பரவலாக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு பருவமழையை வலுப்படுத்தும் வகையில் அமையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.