This Article is From Dec 24, 2019

“பெரியார், கலைஞரை இழிவாகப் பேசினால்…”- BJPஐ எச்சரிக்கும் செல்லூர் ராஜூ!

Periyar - “யாராக இருந்தாலும், தந்தை பெரியாரைப் பற்றி இழிவாக பேசினால் அது கண்டிக்கத்தக்கது,”- செல்லூர் ராஜூ

“பெரியார், கலைஞரை இழிவாகப் பேசினால்…”- BJPஐ எச்சரிக்கும் செல்லூர் ராஜூ!

Periyar - "தமிழகம் என்றைக்கும் திராவிட பூமி"

Periyar - பகுத்தறிவு பகலவன் என்றும் திராவிட சித்தாந்தத்தின் ஆசானாகவும் பார்க்கப்படுகின்ற ஈ.வே.ராமசாமி என்னும் பெரியாரின் நினைவு தினம் இன்று. இதையொட்டிப் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக, தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை இட்டிருந்தது. அதற்கு பரவலான எதிர்ப்புகள் கிளம்புவே, அந்தப் பதிவை பாஜக நீக்கியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். 

“தமிழகத்தில் சுயமரியாதை இயகத்தை உருவாக்கிக் கொடுத்தவர் தந்தை பெரியார். அதற்கு உறுதுணையாக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழகம் என்றைக்கும் திராவிட பூமி. 

இன்றைக்கு பல மாநிலங்கள் மொழியாலும் மதத்தாலும் பிரிந்து கிடந்தாலும், அனைத்து சமூகத்தினரும் சகோதரர்களாக இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். அதற்குக் காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் டாக்டர் கலைஞர் கருணாநிதி…” என்று செல்லூர் ராஜூ கூற, ஒரு நிருபர் அவரை இடைமறித்து, “உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜக பெரியார் பற்றி…” என ஆரம்பித்தார்.

அதற்கு செல்லூர் ராஜூ உடனே, “யாராக இருந்தாலும், தந்தை பெரியாரைப் பற்றி இழிவாக பேசினால் அது கண்டிக்கத்தக்கது,” என்று காட்டமாக கூறினார். 

c5b11mm

“மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று!!

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதிகொள்வோம்,” என்று தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இந்தப் பதிவிற்குப் பரவலான எதிர்ப்புகள் கிளம்பவே, அதை நீக்கிவிட்டது பாஜக. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?,” என்று பதிலடி கொடுத்துள்ளார். 

.