This Article is From Apr 30, 2020

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப புதிய இணையதளம் தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப புதிய இணையதளம் தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப புதிய இணையதளம் தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு!

ஹைலைட்ஸ்

  • வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப புதிய இணையதளம் தொடக்கம்
  • சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
  • தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org பதிவிடலாம்

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப உதவும் வகையில் இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் விண்ணப்பித்து வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக நேற்றிரவு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு வரும்போது அவர்களிடம் கொரோனா அறிகுறி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்துதலின் கீழ் 14 நாட்கள் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் பேருந்தை அனுப்பி வைத்து அழைத்து வரலாம். பேருந்துகளில் சானிட்டைசர், சோப்பு, கிருமி நாசினி போன்றவை இருக்க வேண்டும். முக்கியமாக சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப உதவும் வகையில் இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காகதேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25.03.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. 

இதனால், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும், அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் எண்ணம் உள்ளவர்கள் இந்தப் பக்கத்தில் உடனே சென்று தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யலாம். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் உடனடியாகத் தமிழகம் திரும்பவும் அவர்கள் குடும்பத்தினர் நலனுக்காக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

.