இதற்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆரம்பமாகும்.
TANCA rank list 2019: அண்ணா பல்கலைக்கழகம், டேன்சட் (TANCET) மற்றும் கேட் (GATE) தேர்வு எழுதியவர்களுக்கான TANCA 2019 பட்டியலை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://tanca.annauniv.edu/tanca19/ என்பதில் வெளியிடப்பட்டுள்ளது. ME/ M.Tech./ M.Arch./ M. Plan போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வு டேன்சட் 2019 மற்றும் கேட் முடிவுகளின் அடிப்படையில்தான் நடத்தப்படும். இதற்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆரம்பமாகும்.
TANCA rank list 2019: நேரடி லிங்க்
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் மூலம் உங்களது TANCA ரேங்க் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
https://admissions.annauniv.edu/tanca19/
முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வு எழுதியவர்கள் யூசர் ஐடி மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
டேன்சட் மற்றும் கேட் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள தனித் தனியே லிங்குகள் இருக்கின்றன.
TANCA rank list 2019: கவுன்சிலிங் தேதி
அண்ணா பல்கலைக்கழக்கத்தின் பல்வேறு துறைகளின் அட்மிஷன், அதற்குக் கீழ் வரும் கல்லூரிகளின் அட்மிஷன், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுய-நிதி பொறியியல் கல்லூரிகளுக்கான அட்மிஷன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தேதிகளில் நடைபெறும்.
TANCA ரேங்க் வெளியீடு: ஆகஸ்ட் 22, 2019
கேட் கவுன்சிலிங்: ஆகஸ்ட் 27, 2019
மாற்றுத் திறனாளிகளுக்கான டேன்சட் கவுன்சிலிங்: ஆகஸ்ட் 27, 2019
டேன்சட் கவுன்சிலிங்: ஆகஸ்ட் 28, 2019 முதல் ஆகஸ்ட் 30, 2019 வரை.
எஸ்.சி.ஏ முதல் எஸ்.சி கவுன்சிலிங்: ஆகஸ்ட் 30, 2019