This Article is From Dec 21, 2018

மனைவியை வெட்டி துண்டுதுண்டாக்கி ஓவனில் வைத்து எரித்தவரை விடுவிக்க உத்தரவு

1995-ல் மைக்ரோ ஓவன் என பொருள்படும் தந்தூரில் வைத்து சுஷில் சர்மா கொலை செய்ததால் அவனை ''தந்தூர் கொலைகாரன்'' என்று பரவலாக அழைத்தனர்.

மனைவியை வெட்டி துண்டுதுண்டாக்கி ஓவனில் வைத்து எரித்தவரை விடுவிக்க உத்தரவு

19 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்ததால் தன்னை விடுவிக்குமாறு சுஷில் சர்மா கோரிக்கை வைத்துள்ளார்.

New Delhi:

''தந்தூர் கொலைகாரன்'' என பரவலாக அழைக்கப்பட்ட சுஷில் சர்மாவை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவன் மனைவியை வெட்டி துண்டு துண்டாக்கி அவரை மைக்ரோ ஓவனில் வைத்து எரித்ததால் இந்த பெயர் அவனுக்கு கிடைத்தது. 


டெல்லியை சேர்ந்த சுஷில் சர்மா என்பவர் கடந்த 1995-ல் இளைஞர் காங்கிரசில் முக்கிய பொறுப்பில் இருந்தார். இவரது மனைவியின் பெயர் நைனா சாஹ்னி. அவருக்கும் இன்னொரு நபருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

 
இந்த நிலையில், மனைவியை வெட்டிக் கொன்ற சுஷில் சர்மா அவரது சடலத்தை துண்டு துண்டாக்கி மைக்ரோ ஓவனில் வைத்து எரிக்க முற்பட்டுள்ளார். இந்த சம்பவம் 1995-ல் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. 

naina sahni tandoor murder

சுஷில் சர்மாவின் மனைவி நைனா சாஹ்னி

இந்த வழக்கில் அவருக்கு கடந்த 2003-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனை கடந்த 2007-ல் டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இருப்பினும் கடந்த 2013-ல் நடந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுஷில் சர்மாதான் சடலத்தை வெட்டி துண்டு துண்டாக்கியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது. இதன்பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து சுமார் 20 ஆண்டுகளாக சுஷில் சர்மா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது பெற்றோருக்கு 80 வயதுக்கும் மேல் ஆவதால், அவர்களை கவனிப்பதற்காக தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். 

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் மனித உரிமை அடிப்படையில் அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கு உத்தரவிட்டது. சுஷில் சர்மா செய்தது கொடூரமான கொலைதான். இருப்பினும் அதற்கான தண்டனையை அவர் அனுபவித்து விட்டதாக நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

.