This Article is From Feb 05, 2020

இரு மொழிகளில் குடமுழுக்கு; விழாக் கோலம் பூண்ட தஞ்சை பெரிய கோயில்!!

தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர் கட்டிய கோயிலில் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தின. 

இரு மொழிகளில் குடமுழுக்கு; விழாக் கோலம் பூண்ட தஞ்சை பெரிய கோயில்!!

"தமிழுக்கும் சமஸ்கிரத்துக்கும் ஒரே மாதிரி அந்தஸ்து என்பதைத் தாண்டியும், தமிழ் மொழிக்கே முதன்மை இடம் கொடுக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்"

தஞ்சாவூரில் இருக்கும் பெருவுடையார் கோயிலில் இன்று அதிகாலை முதல் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடக்கும் குடமுழுக்கு நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர். தமிழகத்தைத் தாண்டியும் இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குடமுழுக்கைக் காண பக்தர்கள் குவிந்துள்ளனர். இன்று மேலும் சிறப்பாக சமஸ்கிரதத்தில் மட்டுமல்லாமல், தமிழிலும் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. 

முன்னதாக சமஸ்கிரதத்தில் மட்டுமே குடமுழுக்கு மந்திரங்கள் சொல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழ் அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர் கட்டிய கோயிலில் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தின. 

இதனால், தமிழக அரசு, தமிழ் மற்றும் சமஸ்கிரதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால், பிரச்னை சற்றுத் தணிந்துள்ளது. 

இந்நிலையில் மாநில தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “கர்ப்ப கிரகம், யாக சாலை, கோயில் மேலே இருக்கும் கலசத்திற்கான பூசைகள் அனைத்திலும் தமிழ் மற்றும் சமஸ்கிரத்தில் மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் சொல்லப்படும் என்பதை தெளிவாக சொல்லிவிட்டோம். 

எந்த மந்திரங்கள், எங்கேங்கே சொல்லப்படும் என்பதையும் அரசு சார்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். தமிழுக்கும் சமஸ்கிரத்துக்கும் ஒரே மாதிரி அந்தஸ்து என்பதைத் தாண்டியும், தமிழ் மொழிக்கே முதன்மை இடம் கொடுக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார். 

இப்படிப்பட்ட சூழலில் இன்று காலை 9:30 மணி அளவில் ராஜ கோபூரத்துக்குக் குடமுழுக்கு நனைபெறும் எனத் தெரிகிறது. 


 

.