This Article is From Sep 28, 2018

நானா படேகரை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர்… பகீர் தகவல் கூறிய தனுஸ்ரீ தத்தா!

பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

நானா படேகரை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர்… பகீர் தகவல் கூறிய தனுஸ்ரீ தத்தா!

பாலிவுட் விவேக் அக்னிஹோத்ரி குறித்து தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தனுஸ்ரீ

ஹைலைட்ஸ்

  • தனுஸ்ரீயின் ஆடையைக் கழற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளார் என தகவல்
  • இர்ஃபான் கான், இயக்குநரிடம் கோபப்பட்டார், தனுஸ்ரீ
  • சாக்லேட் படத்தை எடுத்தது விவேக் அக்னிஹோத்ரி
New Delhi:

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, ஒரு அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை சில நாட்களுக்கு முன்னர் கூறினார். நடிகர் நானா படேகர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் எனவும், அது பலருக்குத் தெரிந்தும் அமைதி காத்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை எற்படுத்தியுள்ள நிலையில், பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி குறித்து, தனுஸ்ரீ ஒரு பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய தனுஸ்ரீ, ‘நானா படேகர் குறித்து திரைப்படத் துறையில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அவர் பெண்கள் குறித்து எப்படிப்பட்ட எண்ணத்தை வைத்திருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும். அவரின் பின்புலம் குறித்தும் தெரியும்…

அவர் எப்படி நடிகைகளை தாக்கியுள்ளார், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார், பெண்களுடன் எவ்வளவு தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார் போன்ற விஷயங்கள் பலருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அது எதுவும் ஊடகங்களில் வருவதில்லை’ என்று விவரித்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் குறித்து தனுஸ்ரீ, ‘நானா படேகர், 10 ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி பலருக்குத் தெரியும். அது குறித்து நிறைய பேசப்பட்டாலும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைப் போன்ற விஷயங்கள் குறித்து பேசாமல், இங்கு எந்த மாற்றமும் சாத்தியமில்லை’ என்று விளக்கினார்.

தொடர்ந்து அவர், ‘அக்‌ஷய் குமார், ரஜினிகாந்த் போன்ற உச்சபட்ச நடிகர்கள் நானா படேகருடன் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் தொடர்ந்து படேகர் போன்ற ஆட்களுடன் நடிப்பதால் எந்த மாற்றமும் நடக்க வாய்ப்பில்லாமல் போகும்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தனுஸ்ரீ, ‘2005 ஆம் ஆண்டு, ‘சாக்லேட்’ என்ற படத்தில் நடத்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் படத்தின் இயக்குநர், பட செட்டில் இருக்கும் போது ‘உனது ஆடையை கழட்டிவிட்டு, ஆடு’ என்றார். அப்போது படத்தின் சக நடிகர்களான இர்ஃபான் கான் மற்றும் சுனில் ஷெட்டி, இயக்குநரை கடிந்து கொண்டனர்’ என்று கூறியுள்ளார். பாலிவுட்டில் வந்த சாக்லேட் திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆகும். தனுஸ்ரீ-யின் அடுத்தடுத்த பகீர் தகவல்களால் பாலிவுட் வட்டாரம் சற்று ஆட்டம் கண்டுள்ளது. பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.