Read in English
This Article is From Oct 30, 2018

தலித் மக்களுக்காக குரல் கொடுப்பதால் என் மீது பொய் குற்றச்சாட்டு: பஞ்சாப் அமைச்சர்

பெண் அதிகாரி ஒருவருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்ட சரண்ஜித் சிங் சானி, வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் முதல் முறையாக ஊடகத்தினரை சந்தித்தார்

Advertisement
Chandigarh

சரண்ஜித் சிங் சானி முதலமைச்சரிடம் தன்னுடைய தரப்பு விளக்கங்களை கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Chandigarh:

சரண்ஜித் சிங் சானி பெண் அதிகாரி ஒருவருக்கு தவறான எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய பஞ்சாப் அமைச்சர் சத்தீஸ்கரில் தலித் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசியதால், சரண்ஜித் மீது இது போன்ற புகார்கள் கூறப்படுவதாக அவர் கூறினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன், பெண் அதிகாரி ஒருவருக்கு தவறான எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டார். அதன் பிறகு முதல்முறையாக ஊடகத்தினரை சந்தித்துள்ளார்.

சரண்ஜித் சிங் சானி பேசுகையில், பெண்கள் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. என்னுடைய அலுவலகத்தில் இரண்டு
தனியார் செயலாளர்கள் உள்ளார்கள். மேலும் இதுபோக மூன்று பெண்கள் உள்ளார்கள் அவர்கள் அனைவரிடமும் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொள்வேன். மேலும் நான் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறிய பெண்ணும் என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

Advertisement

சிரோமனி அகாலி தள கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் இந்த பிரச்சனையை கிளம்பி விட்டிருக்கிறார்கள். தலித் சமூதாயத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், தலித் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதால் என் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துகின்றனர் என்று கூறியுள்ளார்.

முதலமைச்சரின் அறிவுரைப்படி இயங்குபவர்கள் நாங்கள். அவர் எனக்கு எதிராக முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement