Read in English
This Article is From Oct 27, 2018

19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸில் இணைந்த தாரிக் அன்வர்.!

தாரிக் அன்வர் (Former NCP leader Tariq Anwar) 19 வருடங்களுக்கு பிறகு கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை (Rahul Gandhi) அவரது இல்லத்தில் சந்தித்தார்

Advertisement
இந்தியா Posted by

இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பின் தாரிக் அன்வர் கட்சியில் இணைந்தார்

New Delhi:

தாரிக் அன்வர் 19 வருடங்களுக்கு பிறகு கட்சியில் இணைந்துள்ளார். 1999ம் ஆண்டு கட்சியிலிருந்து விலகி பின்னர், சரத் பவருடன் இணைந்து தேசிய காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அக்கட்சி தலைவர் சரத் பவாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், கட்சியிலிருந்து விலகினார்.

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் தாரிக் அன்வர் சந்தித்தார். காங்கிரஸ் கட்சியின் செயலாளார் அசோக் கிலோட் மற்றும் சக்திசின்ங் கோஹில் தலைமையில் தாரிக் அன்வர் கட்சியில் இணைந்தார்.

பிரதமர் மோடிக்கு ஆதரவாக ரஃபேல் விவகாரத்தில் சரத்பவர் பேசியதால், கடந்த செப்.28ஆம் தேதி தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தாரிக் அன்வர் எம்.பி பதவியையும் ராஜினாமா செய்தார்.

Advertisement

கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதாள கட்சியின் ஆதரவில் பீகாரின் கட்டிஹர் தொகுதி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ல் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியில் எம்.பி பதவியை வெற்றி பெற்றார் அப்போது அவருக்கு வயது 29. 1984ல் மீண்டும் வெற்றியடைந்தார். 1996 மற்றும் 1998 ஆண்டிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

சோனியா காந்தி வெளிநாட்டினை சேர்ந்தவர் என்பதை காரணம் காட்டி அவர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த, சரத் பவர் மற்றும் சங்மாவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கினர்.

Advertisement
Advertisement