This Article is From Oct 01, 2018

நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு; மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை!

அக்டோபர் 2 ஆம் தேதியன்று அனைத்து மதுபானக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூடி வைக்க வேண்டும்

Advertisement
இந்தியா Posted by

காந்தி ஜெய்ந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி யாராவது மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சென்னை மாட்டவ ஆட்சியர் சண்முக சுந்தரம், ‘காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப்புகள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் என அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று செய்திக் குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதேபோல நாமக்கல் மாவட்ட ஆட்சியரான ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அக்டோபர் 2 ஆம் தேதியன்று அனைத்து மதுபானக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூடி வைக்க வேண்டும். மீறி திறந்தாலோ, மறைமுகமமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement