This Article is From Jan 03, 2019

மது விற்பனையில் புது உச்சம் தொட்ட தமிழ்நாடு

2017ஆம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி 90.97 கோடியும் டிசம்பர் 31-ம் தேதி 139.55 கோடியும் விற்பனையானது

மது விற்பனையில் புது உச்சம் தொட்ட தமிழ்நாடு

2019 ஆண்டு தொடங்குவதை கொண்டாடும் விதமாக புத்தாண்டையொட்டி மது விற்பனை புது உச்சத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை குறிவைத்து டாஸ்மாக் விற்பனை நடைபெறுவது வழக்கம். தீபாவளி, புத்தாண்டு போன்ற நாள்களில் மதுவிற்பனையில் தமிழகம் புதிய உச்சத்தை தொடுவது வழக்கம் அதுபோல் இந்த ஆண்டும் மது விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது தமிழகம்.

கடந்த இரண்டு வருடங்களின் விற்பனை பின்வருமாறு

2015 ஆம் ஆண்டு டிசம்பர் 30 -ம் தேதி -70.34 கோடி, டிசம்பர் 31-ம் தேதி -112.11 கோடியும் மது விற்பனையானது. 2016ல் டிசம்பர் 30–ம் தேதி 70.58 கோடியும் டிசம்பர் 31-ம் தேதி -112.11 கோடியும் மது விற்பனையானது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி 90.97 கோடியும் டிசம்பர் 31-ம் தேதி 139.55 கோடியும் விற்பனையானது.

இதைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மது விற்பனை 243 கோடியை எட்டியுள்ளது. 2017 ஆண்டு புத்தாண்டு வாரக் கடைசியில் வந்தது இம்முறை புத்தாண்டு வார நாட்களிலே வந்ததால் டாஸ்மாக் விற்பனையாளர்கள் இந்த அமோக விற்பனையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

.