This Article is From Sep 17, 2020

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ₹ 861 கோடியில் கட்டுகிறது டாடாவின் நிறுவனம்!

புதிய கட்டிடம் ஒரு முக்கோணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கட்டிடம் தற்போதுள்ள வளாகத்திற்கு அருகில் கட்டப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அரசாங்க குடிமை அமைப்பு புதிய பாராளுமன்றத்தினை கட்டுவதற்கு 940 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டிருந்தது.

New Delhi:

புதிய பாராளுமன்ற கட்டிடம் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் 861.90 கோடி செலவில் கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

865 கோடி ஏலத்தை சமர்ப்பித்த லார்சன் மற்றும் டூப்ரோவை டாடாஸ் வென்றது.

புதிய பொது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான ஏலத்தினை மத்திய பொதுப்பணித் துறை இன்று தொடங்கியது. இந்த திட்டம் ஒரு வருடத்தில் நிறைவடையும் .

அரசாங்க குடிமை அமைப்பு புதிய பாராளுமன்றத்தினை கட்டுவதற்கு 940 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டிருந்தது.

புதிய கட்டிடம் ஒரு முக்கோணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கட்டிடம் தற்போதுள்ள வளாகத்திற்கு அருகில் கட்டப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் வட்டமானது மற்றும் இந்தியாவின் மிகவும் பாராட்டப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இந்த கட்டிடம் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்ட பின்னர் மற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் கட்டுமானம் 1921 இல் தொடங்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்தது. இடத்திற்கான தேவை காரணமாக 1956 ஆம் ஆண்டில் இரண்டு தளங்கள் சேர்க்கப்பட்டன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான தனது முடிவை அரசாங்கம் முன்வைத்திருந்தது.

தொகுதிகளை மறுசீரமைத்த பின்னர் மக்களவையில் அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடும், பழைய கட்டிடத்தில் போதுமான இடமில்லை என்று அரசு தெரிவித்திருந்தது.

2022 ஆம் ஆண்டில், நாடு 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் போது, ​​புதிய கட்டிடத்தில் அமர்வுகள் நடத்தப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

.