This Article is From Jul 05, 2019

வரி குறைப்புக்கள், நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Union Budget 2019: சில பிரிவுகளுக்கு தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவதன் மூலம் நிர்மலா சீதாராமன் சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்புள்ளது.

மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் மோடி அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்

New Delhi:

நடுத்தர வர்க்கங்களுக்கான வரி நிவாரணத்துடன், ஐந்தாண்டுகளாக பின்தங்கியுள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் இருக்காலம் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

2வது முறையாக மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் மோடி அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த காலண்டில் 5.8%ஆக குறைந்திருந்தது. அதேபோல வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7%ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. எனவே இந்த நிலையை அடைய மத்திய பட்ஜெட்டில் கிராமபுற வளர்ச்சி மற்றும் சிறு, குறு தொழில்துறை நிறுவனங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த முற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவதன் மூலமும், விவசாயம், சுகாதாரம் மற்றும் சமூகத் துறைகளுக்கான செலவினங்களை அதிகரிப்பதன் மூலமும் நிதியமைச்சர் சாமானியர்களுக்கு நிவாரணம் அளிக்க வாய்ப்புள்ளது என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 3.4% சதவிகிதமாக இருந்தது. அத்துடன் கடந்த நிதியாண்டில் வருமானவரி வசூலிப்பதற்கு நிர்ணயித்த இலக்கை மத்திய அரசு தவறவிட்டது.

நிதி ஆதாரத்தை மத்திய அரசின் அமைப்புகள் தனியார் மையமாக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதன் மூலம் வருவாயை புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்களுக்கும் ஒதுக்கலாம் என்றும் தெரிகிறது

மத்திய அரசு கடந்த ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதியை ஏற்படுத்தும் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதனை நிறைவேற்றியது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களிலும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கும் வசதி உள்ளிட்டவற்றில் கவனம் அளிக்கும்.

இந்தப் புதிய திட்டங்களுடன் சேர்த்து ஏற்கெனவே உள்ள கிஷான் யோஜ்னா திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பார்த் திட்டம் ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 45 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இம்முறை வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கு சில ஏற்பாடுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(With inputs from agencies)

.