குற்றவாளி இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
Chandigarh: பஞ்சாபில் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது 5 வயது மகளுக்கு முன்னாள் தான் பணியாற்றும் பள்ளிக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சரப்ஜித் கவுர் என்ற அந்த ஆசிரியை இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தை கரார் டவுனில் உள்ள தான் பணியாற்றும் பள்ளியில் நிறுத்திக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்பது இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை. குற்றவாளி தனது முகத்தை துணியால் மூடியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோது, அதனை ஆசிரியையின் 5 வயது மகளும் பார்த்திருக்கிறார்.
ஆசிரியையை சுட்டுக் கொன்று விட்டு குற்றவாளி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். உடன் இருந்த குழந்தையை அவர் ஏதும் செய்யவில்லை. இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தனியார் பள்ளியில் ஆசிரியை கவுர், பஞ்சாபி மற்றும் பிரெஞ்ச் பாடங்களை எடுத்து வந்தார்.
சம்பவம் நடந்த பகுதியில்தான் குற்றவாளி சுற்றித் திரிந்ததாகவும், ஆசிரியை வந்ததும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.